அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது. இதில் வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரசீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டனர்.
இந்நிலையில் ஒரு சில வீரர்களை அந்த அணி மட்டும் தக்க வைக்க வில்லை என்றால் அவர்கள் இந்த நிலைமை மிகவும் பரிதாபமாக அமைந்திருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அப்படிப்பட்ட வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்
மயங்க் அகர்வால்
பஞ்சாப் அணி தனது முதன்மை வீரராக அந்த அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வாலை 14 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்து விட்டது.
என்னதான் பஞ்சாப் கிங்ஸ் அகர்வாலை தனது அணியில் தக்கவைத்தாலும் அவர் கடந்த காலங்களில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி உள்ளார். ஒருவேளை பஞ்சாப் அணி மட்டும் இவரை தக்க வைக்க வில்லை என்றால் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் இவர் மிகவும் சொற்ப விலைக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.