ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த தொடர் மிக மோசமாக துவங்கியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் சொதப்பியதால் தோல்வியை சந்தித்த சென்னை அணி, லக்னோ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்துவீச்சில் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும், சென்னை அணி இந்த போட்டியிலும் படுதோல்வியையே சந்தித்தது.
ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக 9ம் தேதி நடைபெறும் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டிக்கான சென்னை அணியில் கட்டாயம் செய்யப்பட வேண்டிய மூன்று மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
3 – தோனி ;
கடந்த தொடரை விட தோனி இந்த தொடரில் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்படுகிறார். கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி 5வது இடத்தில் களமிறங்கினால் அது சென்னை அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்க்கும். தோனிக்கும் அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போதிய நேரமும் கிடைக்கும், எனவே தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி களமிறங்குவதே அவருக்கும், சென்னை அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.