பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
15வது ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான சென்னை அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் அணி 3 மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஷாருக் கான்,நாதன் எல்லிஸ் மற்றும் வைபவ் ஆரோரா ஆகிய மூவருக்கும் பதில் ரிஷி தவான், சந்திப் ஷர்மா மற்றும் பணுகா ராஜபக்சே விளையாடவுள்ளனர்.
பஞ்சாப் அணியின் பிளேயிங் 11
மாயங்க் அகர்வால்(c), ஷிகர் தவான்,ஜானி பேர்ஸ்டோ,லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா,பனுகா ராஜபக்சே,ரிஷி தவான்,ககிசோ ரபடா,ராகுல் சஹர், சந்திப் ஷர்மா, அர்ஷ்டிப் சிங்க்.
சென்னை அணியின் பிளேயிங் 11
ருத்ராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா(c), தோனி, டுவைன் பிரிட்டோரியாஸ், டுவைன் பிராவோ, மிச்சல் சாட்டினர், மகேஷ் தீக்சனா,முகேஷ் சவுத்ரி