2022 ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது, கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல முக்கிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோன்று தனது அணிக்கு முக்கியம் என்று கருதி அணியில் தக்க வைக்கப் பட்ட வீரர்கள் சிலரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இதனால் ஒவ்வொரு அணியும் செய்வதறியாது தினரிக்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் 2022 ஐபிஎல் தொடரில் தனது அணிக்கு முக்கியம் என்று கருதப்பட்டு தக்க வைக்கப்பட்ட 4 வீரர்கள், சரியாக செயல்படாததால் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
அப்படிப்பட்ட 4 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
கிரன் பொல்லார்ட்
ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த கூடிய திறமை படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரன் பொல்லார்ட் , இந்த வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பி அவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்தது.
ஆனால் இவர் இந்த வருடம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் விட லெவனிலிருந்து கைவிட்டு விட்டது,