அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை (அதிகபட்சம் 4 வீரர்கள்) தக்க வைத்து கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டிய காட்டாயத்தை சந்தித்தது.
வேறு வழியில்லாததால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்து கொண்டு மற்றவர்களை விடுவித்தது. இதில் வெங்கடேஷ் ஐயர், ரிஷப் பண்ட், ருத்துராஜ் கெய்க்வாட், முகமது சிராஜ் போன்ற இளம் வீரர்கள் பலர் நல்ல விலைக்கு தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டிருந்தாலும், ஐபிஎல் வரலாற்றின் ஜாம்பவான்களாக திகழ்ந்து வரும் ரசீத் கான், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, டூபிளசிஸ், பிராவோ, ஹர்திக் பாண்டியா போன்ற சீனியர் வீரர்கள் பலர் தங்களது அணிகளில் இருந்து கழட்டிவிடப்பட்டனர்.
மேலும் கடந்த முறை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வீரர்களை திறமையின் காரணமாக வருகிற ஐபிஎல் தொடரில் அதிக தொகை கொடுத்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அப்படிப்பட்ட 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
வெங்கடேஸ் ஐயர்
2021 ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்ற அளவிற்கு பேசப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வெங்கடேச ஐயர் 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமாகினார்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் அசத்தி வந்த வெங்கடேச ஐயரை 8 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் தக்க வைத்து விட்டது. இது அவர் முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாகும்.