வேற லெவல்ல பந்துவீசுறான்… இந்த பையனுக்கு செம போட்டி நிலவும்; ஆகாஷ் சோப்ரா உறுதி !!

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ராஜஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி ஐபிஎல் தொடரில் எந்த அளவிற்கு திறமையான வீரர் என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி 14 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணியில் அதிக வேகமாக பந்து வீச கூடிய வீரர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம், ஏனென்றால் இந்திய அணி மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு மிகவும் உகந்ததாக இருப்பதால் வேகப்பந்து வீச்சு அந்த அளவு இந்தியவில் எடுபடாது, ஆனால் அதிலும் பும்ரா போன்ற விதிவிலக்கான வீரர்கள் மட்டும் எப்பேர்பட்ட மைதானத்திலும் சிறப்பாக செயல்படுவார்கள்.

அந்த வகையில் எப்பேர்ப்பட்ட மைதானத்தில் மிக வேகமாக பந்துவீச கூடிய திறமை பெற்றிருக்கும் கார்த்திக் தியாகி கடந்த 2021 காயம் காரணமாக பங்கு கொள்ளவில்லை.

இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக தனது ஆரம்ப விலையாக 20 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்துள்ள கார்த்திக் தியாகியை ஒவ்வொரு அணியும் தனது அணியில் இணைப்பதற்காக போட்டி போடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனக்கென தனி திறமை படைத்த கார்த்திக் தியாகி வருகிற 2022 ஐபிஎல் ஏலத்தில் 3-4 கோடி தொகை கொடுத்து அணியில் இணைத்துக் கொள்வதற்கு தகுதியான வீரர் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

அதில், ‘காயம் காரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் கார்த்திக் தியாகி விளையாடவில்லை, இருந்தபோதும் அவருக்கான மவுசு இன்னும் குறையவில்லை, ஒருவேளை நான் ஒரு அணியில் இருந்து என்னிடம் பணம் இருந்தால் நிச்சயம் என்னுடைய லிஸ்டில் கார்த்திக் இடம் பெற்றிருப்பார், அவருக்காக நான் 3-4 கோடி ரூபாய் செலவு செய்தாவது அணியில் இனைத்திருப்பேன், அதேபோன்று கார்த்திக் இந்திய அணியில் இருக்கும் உயரமான ஒரு வேகப்பந்து வீச்சாளர், கார்த்திக் தியாகி இந்திய வீரர் என்பதால் அவருக்காக நாம் தான் குரல் கொடுக்க வேண்டும்(Vocal for local) என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.