சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை விட்டு கொடுக்காததற்கு இவர் கூறிய வார்த்தைகள் தான் காரணம்; தீபக் சாஹர் நெகிழ்ச்சி !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் தன்னை முதலில் சந்தித்த போதே இறுதி வரை நீ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவே விளையாடுவாய் என கூறியதை தற்போது தீபக் சாஹர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. லக்னோ மற்றும் அஹமதாபாத் ஆகிய இரு அணிகள் இந்த தொடரில் கூடுதலாக இணைந்துள்ளது. அதே போல் கடந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய ஐபிஎல் மெகா ஏலம் கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த வருடத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.



இந்தநிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு தேர்ந்தெடுத்துள்ளது.

இதில் ஐபிஎல் தொடரில் 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் நேர்த்தியாகவும் சாமர்த்தியமும் ஐபிஎல் ஏலத்தை கையாண்டு தனக்கு தேவைப்படும் வீரர்களை தட்டி தூக்கியது.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த தீபக் சஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து தனது அணியில் இணைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவ்வளவு எளிதாக ஒரு வீரரை அதிக தொகை கொடுத்து வாங்குவது என்பது அபூர்வமான விஷயம். ஆனால் ஆல்ரவுண்டர் தீபக் சஹரை ஏன் இப்படி அதிக தொகை கொடுத்து வாங்கியது என்பதற்கு பின்னணியில் முக்கியமான ஒரு விஷயம் உள்ளது,இதனை தீபக் சஹர் ஏலம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அதில், மற்ற அணியில் விளையாடுவது குறித்து நான் ஒருபோதும் நினைத்து பார்க்கவே இல்லை, 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் நான் தேர்வான பொழுது சென்னை அணியின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் என்னிடம் நீ எப்பொழுதும் சென்னை அணிக்காக விளையாடுவாய் என்று தெரிவித்தார், நானும் சென்னை அணியில் விளையாடுவதற்கு மிகவும் ஆசைப்படுகிறேன். ஸ்ரீநிவாசன் கூறிய அந்த வார்த்தை நான் முழுவதுமாக நம்பினேன், சென்னை அணி என்னை தக்கவைக்க வேண்டும் என்று நான் நிர்வாகத்திடம் கேட்கவில்லை, எனக்கு நன்றாகவே தெரியும் என்னை எப்படியாவது சென்னை அணி ஏலத்தில் எடுத்துவிடும் என்று, இந்த முழு தகவலையும் ஏலம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் தீபக் சஹர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.