ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை அணிக்கு விளையாட வேண்டும் என்று ஆசையாக உள்ளது என்று நட்சத்திர ஆல்ரவுண்டர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் சென்னை அணி மேட்ச் பிக்சிங் இரண்டு வருடம் தற்காலிக தடை விதிக்கும் வரை சென்னை அணியில் விளையாடினார், சென்னை அணி ஐபிஎல் தொடரில் இல்லாதபொழுது 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் தோனி தலைமையில் விளையாடினார்.
பின் 2018 ஆம் ஆண்டு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த ஆண்டு பஞ்சாப் அணி அஸ்வினை தனது அணியில் 7.6 கோடி கொடுத்து இணைத்துக்கொண்டது.
இரண்டாண்டுகள் பஞ்சாப் அணியின் கேப்டனாக பயணித்த அஸ்வினை, 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணி டிரேடிங் மூலம் தனது அணியில் இணைத்துக் கொண்டது. பின் டெல்லி கேப்பிடல் அணியில் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அஸ்வின் மிக சிறப்பாக செயல்பட்டு பல முறை டெல்லி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு தனது முழு பங்களிப்பையும் கொடுத்தார். இருந்தபோதும் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை.
சிறப்பாக செயல்பட்ட அஸ்வினை டெல்லி அணி தக்கவைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரை 2022 ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை 2022 ஐபிஎல் தொடரில் எப்படியாவது தனது அணியில் இணைத்து விட வேண்டும் என்று பல அணிகளும் முயற்சிசெய்து வருகிறது, ஆனால் அஸ்வின் தனக்கு எந்த அணியில் விளையாட ஆசை என்பதை யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
அதில், “எந்த அணியில் விளையாடப் போகிறோம் என்பது எனக்கு தெரியவில்லை, ஒரு சிறந்த தொழில்முறை விளையாட்டு வீரர் எந்த அணியில் இருந்தாலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுப்பார், தற்பொழுது எனக்கு 35 வயதாகிறது நான் எங்கிருந்து எனது ஐபிஎல் பயணத்தை (CSK) ஆரம்பித்தேனோ மீண்டும் அந்த அணியில் விளையாடுவதற்கு ஆசையாக உள்ளது, ஆனால் அந்த அணியில் ஏற்கனவே சுழற்பந்துவீச்சாளர் மோயின் அலி உள்ளார். இதன் காரணமாக சென்னை அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கூட இன்னும் தெரியவில்லை, இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணிக்கு தேர்வாக போகிறேன் என்று சரியாக தெரியவில்லை. ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமான திட்டங்களை வைத்துள்ளது” என்று அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.