நிச்சயம் இந்த முறை டெல்லி கேப்பிடல் அணிக்கு ரிஷப் பண்ட் டைட்டில் பட்டத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் ஐந்து முறை டைட்டில் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல் அணி சர்வசாதாரணமாக வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிளே ஆப் சுற்று வரை முன்னேறி தோல்வியை தழுவிய டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணியை சிறப்பாக வழி நடத்துகிறார் என்றும் அவருடைய கேப்டன்ஷிப் முன்பை விட தற்போது சிறப்பாக உள்ளது என்றும் இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் டெல்லி கேப்பிடல் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமத, ரிஷப் பண்ட் நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு டைட்டில் பட்டத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் குறித்து கலீல் அஹமத் பேசியதாவது, “நிச்சயம் 2022 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் சனிதான் டைட்டில் பட்டத்தை வெல்லும், டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் திறமையான ஒரு கேப்டன், அவர் டெல்லி அணியை மிகவும் சிறந்த முறையில் வழி நடத்துகிறார் நிச்சயம் டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கோப்பையை பெற்றுக் கொடுப்பார் என்று கலீல் அஹமத் பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் 2 (நாளை) ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.