சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் டேவிட் வார்னர் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் 2 வாரங்களில் நடைபெற இருப்பதால் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வெற்றி பெற்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் டேவிட் வார்னர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததன் காரணமாக அணியிலிருந்து பாதியிலேயே நீக்கப்பட்டார்.
என்னதான் இருந்தாலும் ஒரு நட்சத்திர வீரரை இப்படி அவமரியாதையாக பாதியிலேயே அணியிலிருந்து நீக்குவது சரியான முறை கிடையாது என்று கிரிக்கெட் வட்டாரங்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையாக விமர்சிக்கப்பட்ட வந்தது. இருந்தபோதும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை அணியில் இணைக்கவில்லை மேலும் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்க வைத்துக் கொள்ளவில்லை.
இதனால் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய இரண்டு அணிகள் டேவிட் வார்னரை தனது அணியின் கேப்டனாக மாற்றுவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் டேவிட் வார்னரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடுமாறு கமெண்ட் செய்தார், அதற்கு பதிலளித்த டேவிட் வார்னர் தனக்கும் விளையாடுவதற்கு ஆசைதான் என்பதுபோல் ஏமோஜி ஸ்டிக்கரை அனுப்பிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏற்கனவே விராட் கோலி, மாக்ஸ்வல் மற்றும் சிராஜ் ஆகிய மூன்று வீரர்களை தக்கவத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.