இந்திய அணியின் கேப்டனாகும் எல்லா தகுதியும் இந்த பையனுக்கு இருக்கு; இளம் வீரரை பாராட்டி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!

ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வழிநடத்த முடிந்தால் நிச்சயம் அவரால் இந்திய அணியை வழிநடத்த முடியும் என்று ஹர்திக் பாண்டியாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

15வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில், இறுதி போட்டிக்கான இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதின.

 

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் 2022 ஐபிஎல் தொடரில் யார் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்று விருவிருப்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஒருபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்று கூறினாலும் பெரும்பாலும் ஹர்திக் பாணடியா தலைமையிலான குஜராத் அணிதான் வெற்றிபெறும் என்று தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக மோசமாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா நடப்பு ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தது மட்டுமில்லாமல் வேற லெவலில் கேப்டன்ஷிப்பும் செய்து அசத்தியுள்ளார்.

இதனால் பாராட்டு மழையில் நனைந்து வரும் ஹர்திக் பாண்டியாவை பிரபல கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியை வழிநடத்த கூடிய திறமை ஹர்திக் பாண்டியாவிற்கு உள்ளது என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில்,“ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை மிகவும் பிரமாதமாக வழிநடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் உள்ளாகியுள்ளார், இவர் குஜராத் அணியை எந்த ஒரு சலனமும் இல்லாமல் மிகவும் திறமையாக வழிநடத்துகிறார், இவரால் ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வழிநடத்த முடிந்தால் நிச்சயம் இந்திய அணியை வழிநடத்த முடியும், அந்த திறமை இவரிடம் உள்ளது என்று ஹர்திக் பாண்டியாவை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.