தோனி இல்லை, இந்த வீரர் நான் சிறப்பாக பந்துவீச உதவியாக இருந்தார்; வெளிப்படையாக பேசிய முகேஷ் சவுத்ரி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தீபக் சஹர், நான் பந்து வீசுவதற்கு வழிகாட்டுதலாக இருந்து வருகிறார் என்று சென்னை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியில் தீபக் சஹர் இடம்பெறாதது தான் என்று ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த தொடரில் தீபக் சஹர் இல்லாத குறையை இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஓரளவிற்கு சரி செய்து வருகிறார் என்றும், இவருடைய பந்துவீச்சு மிகவும் அருமையாக உள்ளதாக பல முன்னணி வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 11 விக்கெட்களை வீழ்த்திய முகேஷ் தன்னுடைய செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசி வருகிறார், 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தீபக் சஹர் இடம் பெறவில்லை என்றாலும் அவருடன் தொடர்பில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,“சென்னை அணிக்காக தீபக் சஹர் மிகச் சிறந்த முறையில் விளையாடியுள்ளார், அவர் ஒரு அற்புதமான பந்துவீச்சாளர், எப்பொழுதுமே நான் அவருடைய தொடர்பில் தான் இருக்கிறேன் அவர் நான் சிறப்பாக செயல்படுவதற்கு பலமுறை உதவியாக இருந்திருக்கிறார். அவர் என்னிடம் நிலைமையை உணர்ந்து அதற்கு ஏற்றார்போல் பந்துவீசு என்று பலமுறை அறிவுரை வழங்கியுள்ளார், 2022 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் என்னால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை, அப்பொழுது தீபக் பாய் என்னை அழைத்து என்னிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்து கொள்ளும்படி எனக்கு அறிவுரை வழங்கினார். அதற்குப்பின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நான் சிறப்பாக பந்துவீசியதைப் பார்த்து என்னை வெகுவாக பாராட்டினார் என்று முகேஷ் சவுத்ரி தீபக் சஹர் குறித்து பாராட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.