தோனி இம்ரான் தாஹிரிடம் ஏதோ கூறினார் உடனே என் விக்கெட் வீழ்ந்துவிட்டது; தோனி குறித்த ரகசியத்தை பகிர்ந்த இஷான் கிஷன் !!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தோனியின் தந்திரம் எப்படிப்பட்டது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்ட இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் கடைசி வரிசையில் உள்ளது.

பேட்டிங் பந்துவீச்சு என அனைத்திலும் மோசமாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ஒரே ஒரு ஆறுதலாக அந்த அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மட்டுமே திகழ்கிறார்.

இஷான் கிஷன் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் 81ரன்களும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 54 ரங்களும் அடித்து அசத்தியுள்ளார்.

தற்பொழுது மரண பார்மில் இருக்கும் இஷான் கிஷன் 2022 ஐபிஎல் தொடருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வெல்வதற்கான வாய்ப்புள்ள வீரர் என்றும் கிரிக்கெட் வல்லுனர்களால் பாராட்டபட்டு வருகிறார்.

தோனி குறித்து இஷான் கிஷன் பேசியது..

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களை பேசிவரும் இஷான் கிஷன் சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

தோனி குறித்து இஷான் கிஷன் பேசுகையில்,“சென்னை அணிக்கு எதிரான ஏதோ ஒரு போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது மிகவும் நெருக்கடியாக இருந்தேன், ஆனாலும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை எளிதாக கையாண்டு அதிரடியாக ரன்களை குவித்து கொண்டிருந்தேன். அப்பொழுது பந்து வீச வந்த இம்ரான் தாஹிரிடம் தோனி சென்று ஏதோ கூறினார், அவர் என்ன கூறியிருப்பார் என்று என் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது, அப்பொழுது இம்ரான் தாஹிர் எனக்கு ஹாஃப்-வாலி(half-volley) பந்து வீசினார், அதை அடிக்க முயன்று நான், ஷார்ட் தேர்ட்மேனிடம் (SHORT-THIRD MAN) கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை இழந்தேன், அந்த நாள் முதல் இன்றுவரை எப்படி ஒரு பேட்ஸ்மேன் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக டிரைவ் ஷாட் அடிக்க முயன்று தேர்ட் மேனிடம் விக்கெட்டை இழக்க நேரிட்டது என்று தெரியவில்லை. மேலும் தோனியிடம் இருந்து நான் எட்ஜாகி வரும் பந்தை எப்படி கையாள்வது என்பதை கற்றுக் கொண்டேன் என்று இஷான் கிஷன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

 

Mohamed:

This website uses cookies.