இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்று டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடர் இந்தியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
10 அணிகளை கொண்ட இந்த தொடரில் எப்படியாவது கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று ஒவ்வொரு அணிகளும் மிக தீவிரமாக விளையாடி வருகிறது, மேலும் பல இளம் வீரர்கள் இந்த தொடரில் தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்களை நிரூபித்துக் கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக ரஹானே, கலீல் அஹமத் போன்ற இந்திய வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் பக்குவமாக விளையாடி வருகின்றனர். ஏனென்றால் மோசமான பார்மால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட இவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலமாகத்தான் மீண்டும் இந்திய அணியில் தேர்வாவர்களா.. இல்லையா.. என்பது முடிவாகும்.
கலீல் அஹமத் கூறியது….
2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான கலீல் அஹமத் இந்திய அணிக்காக அவ்வளவாக விளையாடவில்லை,இவர் மொத்தம் 11 ODI,14 டி20 போட்டிகளில் பங்கேற்று 28 விக்கெட்டுகள் வீழ்தியுள்ளார்.
இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் ஐபிஎல் தொடரில் இவருக்கான மவுசு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
கடந்த 4 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய கலீல் அஹமதை 2022 ஐபிஎல் ஏலத்தில் 5.25 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி தனது அணியில் இணைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாவென் என்று கலீல் அஹமத் செய்தியாளர் சந்திப்பில் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், என்னுடைய பந்துவீச்சை மேம்படுத்துவதற்கு கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்,தற்போது ஒயிட் பால் மற்றும் ரெட் பால் என இரண்டு தொடரிலும் விளையாடுவதற்கு தயாராக உள்ளேன், தற்பொழுது 140 kmph வேகத்தில் பந்து வீசி வருகிறேன் மேலும் பந்தை ஸ்விங் செய்வதிலும் அதிகமாக பயிற்சி செய்து வருகிறேன், நிச்சயம் அடுத்த 10-12 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுவேன், நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். எனக்கு தற்பொழுது 24 வயதாகிறது என்னால் சிறப்பாக பந்து வீச முடிகிறது இதன் காரணமாக நிச்சயம் நான் இந்திய அணிக்காக நீண்டகாலம் விளையாடுவேன் என்று காலில் அஹமது பேசியிருந்தார்.