இளம் வீரர் அதிரடி நீக்கம்… பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 11வது போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ஜடேஜா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த இரண்டு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பந்துவீசாத துசார் தேஸ்பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிரிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர சென்னை அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ராஜ் பவா மற்றும் ஹர்ப்ரீட் பிரார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜிதேஷ் மற்றும் வைபவ் ஆகியோர் பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;

ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, ரவீந்திர ஜடேஜா, தோனி, சிவம் துபே, டூவைன் பிராவோ, கிரிஸ் ஜோர்டன், டூவைன் ப்ரெடோரியஸ், முகேஷ் சவுத்ரி.

இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணி;

மாயன்க் அகர்வால், ஷிகர் தவான், பனுகா ராஜபக்சே, லியம் லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஜித்தே சர்மா, ஓடியன் ஸ்மித், அர்ஸ்தீப் சிங், காகிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா.

Mohamed:

This website uses cookies.