சென்னை அணியில் சம்பந்தமே இல்லாத மாற்றம்; முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை அணி !!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. டூவைன் ப்ரெடோரியஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகேஷ் தீக்‌ஷன்னா அணியில் சேர்க்கபப்ட்டுள்ளார்.

அதே போல் இந்த போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ஷசான்க் சிங் மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் இன்றைய போட்டிக்கான ஹைதராபாத் அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.