பேட்டிங்கிலும் பக்காவாக செயல்பட்ட ஹைதராபாத் வீரர்கள்; 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 28வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், சாருக் கான் 26 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் 3 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான அபிசேக் ஷர்மா 31 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராகுல் த்ரிபாட்டி 34 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த மார்க்ரம் – நிக்கோலஸ் பூரணி ஜோடி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய மார்க்ரம் 27 பந்துகளில் 41 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.5 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mohamed:

This website uses cookies.