சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்த போட்டிக்கான குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரசீத் கான் குஜராத் அணியை வழிநடத்துகிறார். இந்த போட்டிக்கான குஜராத் அணியில் இருந்து மேத்யூ வேட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விர்திமான் சஹா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் அல்ஜாரி ஜோசப்பும் குஜராத் அணியின் ஆடும் லெவனில் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
அதேவேளையில், இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான சென்னை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ராபின் உத்தப்பா, ருத்துராஜ் கெய்க்வாட், மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, டூவைன் பிராவோ, கிரிஸ் ஜோர்டன், மகேஷ் தீக்சன்னா, முகேஷ் சவுத்ரி.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவன்;
விர்திமான் சஹா, சுப்மன் கில், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரசீத் கான், அல்ஜாரி ஜோசப், லோகி பெர்குசன், யாஸ் தயால், முகமது ஷமி.