பஞ்சாப் அணியுடனான போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் வெறும் 2 போட்டியில் மட்டும் தான் வெற்றியடைந்துள்ளது. எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலையில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கடைசி ஓவரில் மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்ததாக இன்று (25-4-22) நடைபெறும் போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனை பொறுத்தவரையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால், கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான சென்னை அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. இதனால் கடந்த போட்டியில் விளையாடாத மொய்ன் அலிக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.
துவக்க வீரர்களாக வழக்கம் போல் ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரே களமிறங்குவார்கள். மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயூடு, சிவம் துபே, தோனி ஆகியோருமே களமிறங்குவார்கள்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரும், பந்துவீச்சாளர்களாக டூவைன் ப்ரெடோரியஸ், டூவைன் பிராவோ, மிட்செல் சாட்னர், மகேஷ் தீக்ஷன்னா, முகேஷ் சவுத்ரி ஆகியோருக்குமே இந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
பஞ்சாப் அணியுடனான போட்டிக்கான சென்னை அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), தோனி, டூவைன் ப்ரெடோரிய, டூவைன் பிராவோ, மிட்செல் சாட்னர், மகேஷ் தீக்ஷன்னா, முகேஷ் சவுத்ரி.