கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளுக்குமே இந்த போட்டி மிக முக்கியமான போட்டி என்பதால், இரு அணிகளுமே தனது ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் செய்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வருண் சக்கரவர்த்தி உள்பட மூன்று வீரர்களை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹர்சித் ரானா மற்றும் இந்திரஜித் ஆகியோருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுத்துள்ளது.
அதே போல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. சர்பராஸ் மற்றும் கலீல் அஹமத் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சேட்டன் சக்காரியா மற்றும் மிட்செல் மார்ஸ் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ஆரோன் பின்ச், சுனில் நரைன், ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், பாபா இந்திரஜித் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்சித் ரானா.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ரிஷப் பண்ட், லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், சேத்தன் சக்காரியா.