லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான உமேஷ் யாதவ் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை, அவருக்கு பதிலாக ஹர்சித் ராணா ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர கொல்கத்தா அணியில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை.
அதே வேளையில் இந்த போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ஆரோன் பின்ச், பாபா இந்திரஜித், ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், அனுகுல் ராய், ஆண்ட்ரியூ ரசல், சுனில் நரைன், டிம் சவுத்தி, சிவம் மாவி, ஹர்சித் ரானா.
இன்றைய போட்டிக்கான லக்னோ அணியின் ஆடும் லெவன்;
குவிண்டன் டி காக், கே.எல் ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ரூணல் பாண்டியா, ஆயூஸ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஸ்மந்தா சம்மீரா, ரவி பிஸ்னோய், ஆவேஸ் கான், மொஹ்சின் கான்.