குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த போட்டியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, டூவைன் பிராவோ மற்றும் மகேஷ் தீக்ஷன்னா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜெகதீஷன், சோலான்கி, மிட்செல் சாட்னர் மற்றும் மத்தீஷா பதிரனா ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி, எவ்வித மாற்றமும் இல்லாமல் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான குஜராத் அணியின் ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவன்;
விர்திமான் சஹா, சுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரசீத் கான், சாய் கிஷோர், அல்ஜாரி ஜோசப், யஷ் தயால், முகமது ஷமி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, மொய்ன் அலி, சிவம் துபே, ஜெகதீஷன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாட்னர், பிரசாந்த் சோலன்கி, சிம்ரஜித் சிங், மத்தீஷா பதிரனா, முகேஷ் சவுத்ரி.