இளம் வீரர் அணியில் இருந்து நீக்கம்… ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிராக முதலில் பேட்டிங் செய்கிறது சென்னை அணி !!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

மும்பை Brabourne மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் இருந்து சிவம் துபே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அம்பத்தி ராயூடு மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அணியில் வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்த போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஜிம்மி நீஷம் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிம்ரன் ஹெட்மயர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்;

ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, ஜெகதீஷன், தோனி, மிட்செல் சாட்னர், பிரசாந்த் சோலன்கி, சிம்ரஜித் சிங், மத்தீஷா பத்திரானா, முகேஷ் சவுத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்;

யசஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தட் படிக்கல், சிம்ரன் ஹெட்மயர், ரியன் பிராக், ரவிச்சந்திர அஸ்வின், டிரண்ட் பவுல்ட், பிரசீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபட் மெக்காய்.

Mohamed:

This website uses cookies.