மூன்று முக்கிய விக்கெட்டுகளை தட்டி தூக்கிய பும்ராஹ்… பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி வீரர்கள்; மும்பைக்கு எளிய இலக்கு !!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

15வது ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

டெல்லி மற்றும் பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு டேவிட் வார்னர் (5), ப்ரித்வி ஷா (24), மிட்செல் மார்ஸ் (0) மற்றும் சர்பராஸ் கான் (10) ஆகியோர் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ரிஷப் பண்ட் – ரோவ்மன் பவல் ஜோடி, போட்டியின் தன்மையை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வழக்கத்திற்கு மாறாக இந்த போட்டியில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

அதிரடி ஆட்டக்காரரான ரோவ்மன் பவல் 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தார். இதன்பின் களத்திற்கு வந்த அக்‌ஷர் பட்டேல் 10 பந்துகளில் 2 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் 3 விக்கெட்டுகளையும், ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.