2021 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் அனைத்து அணைகளுக்கும் மத்தியிலும் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று சென்னை அணி முக்கியமான சில திட்டங்களை தீட்டி வருகிறது, இந்நிலையில் எந்த வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் எந்த வீரர்களை விடுவிக்கலாம் என்று யோசித்து வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த மூன்று வீரர்களை சென்னை அணி விடுவித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்படிப்பட்ட 3 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
சுரேஷ் ரெய்னா
மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சென்னை அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் அதிகமான ரன்களை அடித்த வீரர்கள் வரிசையில் இடம் பெற்றவர், சென்னை அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை.
இதன் காரணமாக வருகிற 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணியிலிருந்து ரெய்னா விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.