2021 ஐபிஎல் தொடரில் முதலில் வெற்றிகரமாக பயணித்த டெல்லி கேப்பிடல் அணி எதிர்பாராதவிதமாக எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான மிக இடத்தில் எந்த வீரரை தக்க வைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை தனது அணியில் இருந்து விடுவிக்கலாம் என்று டெல்லி அணி தீவிர யோசனையில் உள்ளது.
இந்நிலையில் டெல்லி அணி இந்த 3 வீரர்களை தான் விடுவிக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
பிரித்வி ஷா
இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மிக அற்புதமாக விளையாடிய டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா, இந்திய நாட்டில் டெல்லி அணிக்காக 308 ரன்கள் குவித்தார், ஆனால் துபாயில் நடைபெற்ற 2021ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் இவர் பெயர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இதன் காரணமாக இவர் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.