இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருகிற 2022 ஐபிஎல் தொடரிலாவது எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது.
2021 ஐபிஎல் தொடருக்குப் பின் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்து விட்டதால் அந்த அணி எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் எந்த புதிய வீரரை தனது அணியின் இணைக்கலாம் யாரை கேப்டனாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடர் இடத்தில் 3 வீரர்களை பெங்களூரு அணி தனது அணியில் இருந்து விடுவிக்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் அந்த மூன்று வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.
ஏபி டிவில்லியர்ஸ்
பெங்களூரு அணியின் ஒரு தூண் விராட் கோலி என்றால் மற்றொரு தூணாக பெங்களூர் அணியை தாங்கிப் பிடித்த பெருமை சவுத்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தான் போய் சேரும், பல முறை பெங்களூர் அணிக்காக நிலையில் இருக்கும் பொழுது தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த ஏபி டிவில்லியர்ஸ் 2021 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
சில கிரிக்கெட் வல்லுநர்கள் 2022 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏபி டிவில்லியர்ஸ் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவித்த போதும், சில கிரிக்கெட் ஆர்வலர்கள் நிச்சயம் பெங்களூரு அணி ஏபி டிவில்லியர்ஸ் விடுவித்து விடும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.