2021 ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப்பெரிய கம்பேக் கொடுத்து 2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் மிக சிறந்த முறையில் விளையாடி இறுதி சுற்று வரை முன்னேறியது, ஆனால் எதிர்பாராதவிதமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி சுற்றில் சென்னை அணியுடன் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2022 ஐபிஎல் தொடருக்கான திட்டம் அனைத்து அணிகள் மத்தியிலும் நடைபெற்று வருகிறது, மேலும் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைக்கப்படுவது ஒவ்வொரு அணியும் புது உத்திகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் பிசிசிஐ விதிப்படி ஒரு அணி 3 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தனது அணியில் தக்கவைத்துக்கொள்ளும் 3 வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
சுப்மன் கில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் சுப்மன் கில் 2021 ஐபிஎல் தொடரில் முதலில் மிகவும் மந்தமாக விளையாட ஆரம்பித்தாலும் பின்னர் மிக சிறந்த முறையில் செயல்பட்டு 17 போட்டிகளில் பங்கேற்று 478 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.
மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மக்கலமால் அதிகம் பாராட்டப்பட்டு வரும் வீரராக இருப்பதால், நிச்சயம் இவர் 2022 உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தக்க வைத்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்வதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.