2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருப்பதால் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு அணியும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இனி விளையாட முடியாது என்று தற்காலிக ஓய்வு அறிவித்து இருந்தார். இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை 2022 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கவில்லை.
இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் இவரை இந்த மூன்று அணிகள் நிச்சயம் டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்
மும்பை இந்தியன்ஸ்
ஐந்து முறை கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா போன்ற ஒரு சிறந்த ஆல்ரவுண்டரை தனது அணியிலிருந்து விடுவித்து விட்டது.
இதன் காரணமாக உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.