2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருப்பதால் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு அணியும் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு சில வீரர்கள் எதிர்பார்த்த தொகையை விட அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப் படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.ஆனால் கடந்த தொடரில் மோசமாக செயல்பட்ட சில வீரர்கள் வரிகள் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் விலை போகமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஹர்பஜன் சிங்
நடந்து முடிந்த 2021 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திலேயே ஹர்பஜன்சிங் விலை போக மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை தனது அணியில் இணைத்துக் கொண்டது இருந்தபோதும் இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட வைக்கவில்லை.
அனுபவம் வாய்ந்த வீரரான இவரை வருகிற 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் தேர்ந்தெடுக்காது என்றே பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.