அடுத்த ருத்துராஜ் கெய்க்வாட் ரெடி… இளம் வீரருக்கு குறி வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் !!

விஜய் ஹசாரே போட்டியில் ஒடிசா அணிக்காக விளையாடிய இளம் வீரர் சுப்ரன்சு சேனாபதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சோதனை ஆட்டத்திற்கு (TRAILS) அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 4 முறை கோப்பையை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்று உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் நட்சத்திர வீரர்களும் ஆசைப்படுவார்கள்.

அப்படி ஐபிஎல் தொடரில் முதன்மையான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடருக்கான போட்டியில் ஜடேஜா தோனி மொயீன் அலி மற்றும் ருத்ராஜ் கெய்க்குவாட் போன்ற வீரர்களை தக்க வைத்துள்ளது. மேலும் வருகிற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த வீரர்களை தனது அணியில் இணைத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விஜய் ஹசாரே மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களின் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற்ற ஆந்திரா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் ஒடிசா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஒடிசா அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்த அந்த அணியின் அதிரடி வீரர் சேனாபதி தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமாகி வருகிறார்.

மேலும் இதற்கு முன் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் மிக சிறந்த முறையில் விளையாடிய சேனாபதி இதுவரை டி20 தொடருக்கு அறிமுகமாகி 637 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வரும் சேனாபதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சோதனை ஆட்டத்திற்கு அழைத்துள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பேரும் புகழும் பெற்ற அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு இளம் வீரரை தேடி சென்று சோதனை ஆட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறது என்றால் சேனாபதி மிக சிறந்த பேட்ஸ்மேனாகவே இருப்பார் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Mohamed:

This website uses cookies.