ஜெயிக்கிறதுலாம் அடுத்து தான்; ஹார்திக் பாண்டியா விற்காக காத்திருக்கும் மிகப் பெரும் பிரச்சனை இதுதான்; எச்சரித்த ரவிசாஸ்திரி !!

ஒருவேளை ஹர்திக் பாண்டியாவால் இந்த ஐபிஎல் தொடரில் பந்து வீசமுடியாமல் போனால் அவர் இந்திய அணியை மறந்திட வேண்டியது தான், என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடர் சம்பந்தமான கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்ன சூப்பர் ஜெயன்ட் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளுக்கும் தங்களால் முடிந்த அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியவில்லை என்றால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்கும் வீரர்களுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது, ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பந்து வீச முடியாமல் தடுமாறி அணியிலிருந்து நீக்கப்பட்டார்.இதன் காரணமாக தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மீது அனைவவரின் கண்களும் உள்ளது, ஹர்திக் பாண்டியா இந்த ஐபிஎல் தொடரில் ஓரளவாவது பந்து வீச வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், அப்படி செய்தால் மட்டுமே,அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஆறாவது இடம் நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டருக்கு தான் வழங்கப்படும், ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் அணியில் இருப்பதால் அது அந்த அணியின் கேப்டனுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கும். ஒருவேளை இந்த ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியவில்லை என்றால், டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிர்க்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.