2022 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன்.
கடந்து 2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், அந்த ஆண்டுடன் அனைத்து விதமான கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்து விட்டார்.
ஐபிஎல் தொடரின் தான் விளையாடிய காலங்களில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்திருந்த ஷேன் வாட்சன் டேட்டிங்கில் 3874 ரன்களையும், பந்துவீச்சில் 97 விக்கெட்களையும் வீழ்த்தி ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
இந்தநிலையில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், நிர்வாகத்திடம் துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனை தேர்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் இதன் காரணமாக டெல்லி கேப்பிடல் அணி ஷேன் வாட்சன் துணை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங், துணை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் பிரவீன் ஆம்ரே, மேலும் மற்றும் ஒரு துணை பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன இந்த வரிசையில் ஷேன் வாட்சனும் இடம்பெற்றதால் டெல்லி கேப்பிடல் அணி வீரர்களுக்கு இன்னும் அதிகமான அனுபவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் டெல்லி அணி 2022 ஐபிஎல் தொடரில் தரமான அணி தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நிலையில் பயிற்சியாளராக சிறந்த முன்னாள் வீரர்களை அணியில் இணைத்திருக்கும் டெல்லி அணிக்கு கோப்பை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.
2022 ஐபிஎல் தொடருக்கான 10 அணிகளில் பலம் வாய்ந்த அணிகளில் வரிசையில் டெல்லி அணியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.