பிரண்டன் மெக்கலம் செய்த உருப்படியான காரியம் இதுதான்; பாராட்டிப் பேசிய டேவிட் ஹசி !!

கொல்கத்தா அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸி கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கேப்டன் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் டெல்லி கேப்பிடல் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடி கொடுத்து தனது அணியில் இணைத்துக் கொண்டது.பின் அனைவரும் எதிர்பார்த்தது போலவே, ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணி நிர்வாகம் நியமித்தது.

டேவிட் ஹசி பாராட்டு

இந்த நிலையில், எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக திகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று பாராட்டப்படும் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர் என்று அந்த அணியின் ஆலோசகர் டேவிட் ஹஸி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து டேவிட் ஹஸி பேசுகையில், “ஸ்ரேயாஸ் ஐயர் பிறப்பிலே தலைமைத்துவம் படைத்த ஒரு வீரர், அவர் வீரர்களை மரியாதையுடன் வழிநடத்துகிறார். அவருக்கு உறுதுணையாக துணை கேப்டன் பேட் கம்மின்சும் சிறப்பாக செயல்படுகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் இதற்குமுன் டெல்லி அணியை வழிநடத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, அவருக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு உள்ளது, மற்றும் போட்டியை அணுகும் விதமும், திறமையை வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது, என்னைப்பொறுத்தவரை ஸ்ரேயாஸ் அய்யர் தன்னை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொள்கிறார், மேலும் அந்த அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், ஸ்ரேயாஸ் ஐயரை தனது அணியில் இணைத்து ஒரு சிறந்த நகர்வை அணிக்கு ஏற்படுத்தியுள்ளார் என்று டேவிட் ஹசி பாராட்டி பேசியுள்ளார்.

அதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே குறித்து பேசிய டேவிட் ஹசி, ரஹானே ஒரு அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர், அவர் 10 வருட சர்வதேச கிரிக்கெட் விளையாடிய அனுபவம் படைத்தவர். அவர் தற்பொழுது வேண்டுமென்றால் ரன்கள் எதுவும் எடுக்காமல் இருக்கலாம் ஆனால் ரகானே பயிற்சி செய்யும் விதம் நிச்சயம் இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்பதை உணர்த்துகிறது, மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தலைமைத்துவம் பொருந்திய வீரராகவும் ரஹானே திகழ்கிறார் என்று ஹசி பேசியிருந்தார்.

இந்நிலையில் வருகிற மார்ச் 26 நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியை துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.