லக்னோ அனி சிறந்த அணியாக இருப்பதற்கு இதுதான் முக்கிய காரணம் என்று லக்னோ ஆலோசகர் கௌதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 58 போட்டிகள் நிறைவடைந்துவிட்டது. ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ஐபிஎல் தொடரின் ஜாம்பவான்களாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி போன்ற அணிகள் எல்லாம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய நிலையில் ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான புதிய இரண்டு அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிபபடுத்தி புள்ளிபட்டியலில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கே புதிதாக அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி எப்படி சிறப்பாக செயல்படுகிறது என்பது குறித்து அந்த அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதுகுறித்து காம்பீர் பேசுகையில், “லக்னோ அணி சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் ஏலம் தான், அந்த ஏலத்திலேயே பாதி வேலை முடிந்து விட்டது, ஒரு நல்ல அணியை தேர்ந்தெடுத்து சிறப்பாக நிர்வாகம் செய்ய வேண்டும், வெறும் சிறந்த வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்தால் எல்லாம் வெற்றி பெற முடியாது, இந்த பிரான்சைஸ் புதியது மேலும் அணியில் உள்ளவர்கள் அனைவரும் ஏற்கனவே தொழில்முறை வீரர்கள் மேலும் இந்த அணி அனைவரையும் முதலில் இருந்து புதிதாக தூங்குவதற்கு ஒரு பேக்கேஜாக அமைந்துள்ளது, இதைவிட ஒரு அணியை உருவாக்கி அதை சிறப்பாக கட்டமைப்பதற்கு வேறு வழியே கிடையாது என்று கௌதம் காம்பீர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.