ஐபிஎல் தொடரில் 5 முறை டைட்டில் பட்டத்தை வென்ற அணி என்ற சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் தான் எதிர்கொண்ட 8 போட்டிகளிலுமே தோல்வியை தழுவி பரிதாப நிலையில் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை அணி சரியான வீரர்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதுதான் என்று பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் அனுபவமே இல்லாத வீரரான டிம் டேவிட்டை 8.25 கோடி கொடுத்து அணியில் இணைத்துள்ளது,ஆனால் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இல்லை.
இதன் காரணமாக கிரிக்கெட் வல்லுனர்கள் இவருக்கு பதில் இந்த மூன்று வீரர்களில் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்ந்தெடுத்திருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று தெரிவித்துள்ளனர்.
அப்படிப்பட்ட மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
சிம்ரோன் ஹெட்மைர்
அந்த வரிசையில் நாம் முதலில் பார்க்க உள்ள நபர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி பினிஷெர் சிம்ரோன் ஹெட்மையர் தான்.
இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 ஐபிஎல் தொடரில் 8.50 கோடி கொடுத்து எடுத்துள்ளது, மும்பை இந்தியன்ஸ் அணி சற்று யோசித்து டேவிட்டிர்க்கு பதில் இவரை தேர்ந்தெடுக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.