ஐபிஎல் வரலாற்றிலேயே லசித் மலிங்கா செய்த சாதனையை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹாலும் செய்துள்ளார்.
நீங்களா கிளம்பிடுங்க சஹால், ஏன் சஹாலுக்கு தேவையில்லாமல் வாய்ப்பு கொடுக்கிறீர்கள், சஹாலுக்கு பதில் இந்த வீரரை தேர்ந்தெடுங்கள் என்று சஹாலின் மோசமான பார்மல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான இவர், 2022 ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போதைய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக திகழ்கிறார்.
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சஹாலை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறுமளவிற்கு தன்னுடைய அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வரும் சஹால்,ஐபிஎல் வரலாற்றில் லசித் மலிங்கா செய்த சாதனை ஒன்றை செய்து இரண்டாவது வீரர் என்று பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நான்கு சீசன்களில் 20 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் சஹால் 2வது இடத்தை பிடித்துள்ளார். நடந்துமுடிந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மாயக் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 2022 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டை கடந்துள்ளார்.
இதனால்,2015,2016,2020&2022 ஆகிய தொடர்களில் 20 விக்கெட்டை எடுத்து மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 2011,2012,2013&2015 ஆகிய தொடரில் 20 விக்கெட்டை வீழ்த்தி முதல் ஆளாக இந்த சாதனை படைத்திருந்தார்.
மேலும் 2022 ஐபிஎல் தொடரில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார் (purple cap) என்பது குறிப்பிடத்தக்கது