டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணியில் விளையாடிய மூன்று வீரர்களை தனது அணியில் இணைக்க திட்டமிட்டிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் SA-20 தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணியை வாங்கியிருக்கும் லக்னோ அணி,அந்த அணியில் விளையாடிய 3 வீரர்களை அணியில் இணைப்பதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரே உரிமையாளரின் கீழ் விளையாடிய வீரர்களை வைத்து விளையாடினால் அணி மற்றும் அணி வீரர்களின் புரிதல் நன்றாக இருக்கும் என்பதால், லக்னோ அணி இதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரிகிறது.
அந்த வகையில், லக்னோ அணி வாங்கவிருக்கும் 3 டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணி குறித்து இங்கு காண்போம்
ரீச் டாப்லி
டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இங்கிலாந்து அணி நட்சத்திர வேகப்பந்து வீசசாளரான ரீச் டாப்லி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் SA-20 லீக் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயன்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதுவரை 131 டி20 போட்டிகளில் பங்கேற்று 166 விக்கெட் களை வீழ்த்தியிருக்கும் இவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி தனது அணியில் இணைப்பதற்கான திட்டத்தை வைத்துள்ளதாக தெரிகிறது.