நல்ல முடிவு… அதிரடி ஆட்டக்காரர் எய்டன் மார்கரமை கேப்டனாக நியமித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
அனைவரும் எதிர்பார்த்தபடி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அணியின் புதிய கேப்டனை அறிவித்துள்ளது.
பல்வேறு சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் தொடரில் 2016 ஆம் ஆண்டு டேவிட் வார்னர் தலைமையில் டைட்டில் பட்டதை பெற்றது. அதற்குப்பின் ஹைதராபாத் அணி இதுவரை ஒரு தொடரில் கூட டைட்டில் பட்டதை வென்றது கிடையாது.
வளமான பேட்டிங் ஆர்டர் சிறந்த பௌலிங் லைன் அப் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஹைதராபாத் அணி ஏன் 2016 பின்பு ஒரு தொடரில் கூட டைட்டில் பட்டதை வெல்ல முடியவில்லை என்ற குழப்பத்தில் இருந்தது என்றே கூறலாம், இதனால் ஹைதராபாத் அணியில் கேப்டன்கள் மாற்றப்பட்டனர் மேலும் அணியின் வீரர்களும் மாற்றப்பட்டு பல புதிய முயற்சிகளை ஹைதராபாத் அணி கையில் எடுத்தது. ஆனால் எந்த ஒரு முயற்சியும் ஹைதராபாத் அணிக்கு பலன் கொடுக்கவில்லை.
குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டின் வெற்றிகர கேப்டன் என்ற வரிசையில் இடம் பெற்றிருக்கும் கேன் வில்லியம்சனை ஹைதராபாத் அணி கடந்த வருடம் தனது அணியின் கேப்டனாக நியமித்தது. இருந்த போதும் அவரால் எதிர்பார்த்த அளவிற்கு அணியை சிறப்பாக வழி நடத்தவில்லை என்பதால் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி இடத்தில் ஹைதராபாத் அணி ரீடைன் செய்யாமல் நீக்கிவிட்டது.
இந்த நிலையில் ஹைதராபாத் அணி அடுத்து யாரை தனது அணியின் கேப்டனாக நியமிக்க போகிறது என்ற குழப்பம் கிரிக்கெட் வட்டத்தில் நிலை வந்தது,ஒருசிலர் அனுபவ வீரர் புவனேஷ் குமார் கேப்டனாக நியமிக்கலாம் என்று தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான முன்னால் மற்றும் இந்நாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரம்மை தான்ஹைதராபாத் அணி கேப்டனாக நியமிக்கப் போகிறது என்று கணித்திருந்தனர்.
இந்த நிலையில் பெரும்பாலானவர்கள் கணித்தது போல் தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ரமை தனது அணியின் கேப்டனாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமில்லாமல் அதற்கு பின்பு நடைபெற்ற SA20 தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி அசத்தியதன் மூலம் எய்டன் மார்க்ரம்க்கு சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத் அணியில் புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது