இப்படி ஒரு ஆள வச்சுக்கிட்டு எதுக்குடா யோசிக்குறீங்க… இவரை கேப்டனாக்குங்கள்; ஹைதராபாத் அணிக்கு ஐடியா கொடுக்கும் அஸ்வின் !!

இப்படி ஒரு ஆள வச்சுக்கிட்டு எதுக்குடா யோசிக்குறீங்க… இவரை கேப்டனாக்குங்கள்; ஹைதராபாத் அணிக்கு ஐடியா கொடுக்கும் அஸ்வின்

எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த வீரரை தான் தனது அணியின் கேப்டனாக தேர்வு செய்யும் என்று அனுபவ வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட 2022 ஐ பி எல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாததன் காரணமாக 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்பொழுது கேப்டன் இல்லாமல் தவித்து வருகிறது. என்னதான் ஹைதராபாத் அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான வீரர்கள் இருந்தாலும் யாரை கேப்டனாக்க வேண்டும் என்ற குழப்பத்தில் ஹைதராபாத் அணி தவித்து வருகிறது.

இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்து விட்டதால் ஹைதராபாத் அணி தன்னுடைய அணியின் கேப்டனை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுனர்களும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள்..? என்றும் யாரை நியமித்தால் அணி பலமான அணியாக இருக்கும்..? என்றும் தன்னுடைய கருத்துக்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் உலக கிரிக்கெட் உட்பட ஐபிஎல் தொடர் குறித்தும் தன்னுடைய யூடியூப் சேனல் வாயிலாக பேசி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவி அஸ்வின் ஹைதராபாத் அணி எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் எய்டன் மார்க்ரமைதான் கேப்டனாக தேர்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் தெரிவித்ததாவது, “எய்டன் மார்க்ரம் தான் என் சிறந்த வீரராக கொண்டாடப்படுகிறார் என்பதை கடந்த ஐபிஎல் தொடரில் நிரூபித்துள்ளார். இதனால் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை தக்க வைத்துள்ளது, நிச்சயம் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இவரை தான் ஹைதராபாத் அணி கேப்டனாக நியமிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. தற்பொழுது நடைபெற்ற SA20 தொடரிலும் எய்டின் மார்க்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்., சன்ரைசர்ஸ் ஈஸ்ட்டன் கேப் அணிக்காக விளையாடிய இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக விளையாடியுள்ளார் . இந்த அடிப்படையில் எல்லாம் வைத்துப் பார்த்தால் ஹைதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் தான் செயல்படுவார்.மேலும் இந்த முறை ஹைதராபாத் அணி மிக சிறந்த வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது என்று அஸ்வின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.