அதிரடி நாயகன் டிவில்லியர்ஸிற்கே இடம் இல்லை… ஆல் டைம் சிறந்த ஐபிஎல் ஆடும் லெவனை தேர்வு செய்த அணில் கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அணில் கும்ப்ளே ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் கோலகலமாக நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த வருடத்திற்கான தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ளது.
தோனி போன்ற சில சீனியர் வீரர்களுக்கு எதிர்வரும் ஐபிஎல் தொடர் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என கருதப்படும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான அணில் கும்ப்ளே ஐபிஎல் தொடருக்கான ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
தனது ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக கிரிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ள அணில் கும்ப்ளே மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். 5வது வீரராக டிவில்லியர்ஸ் மற்றும் தோனி ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வது கடினமான முடிவு என தெரிவித்துள்ள அணில் கும்ப்ளே, இருவரையும் எடுப்பது சரியாக இருக்காது என்பதால் தனது அணியில் தோனிக்கு இடம் கொடுத்து அவரையே கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்துள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, பொலார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தேர்வு செய்துள்ள அணில் கும்ப்ளே, பந்துவீச்சாளர்கள் வரிசையில் யுஸ்வேந்திர சாஹல், பும்ராஹ் மற்றும் லசீத் மலிங்கா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
அணில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள ஆல் டைம் சிறந்த ஆடும் லெவன்;
கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கைரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா.