பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய இடி ; இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல் !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய இடி ; இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல் ..

எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இடம்பெற மாட்டார் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் ஒவ்வொரு அணியும் எப்படியாவது இந்த வருடம் கோப்பையை வென்று விட வேண்டும் என்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது குறிப்பாக எந்தெந்த வீரர்கள் எல்லாம் அணியின் உறுதி செய்யப்படுவார்கள் என திட்டமிட்டு அதற்கான சிறந்த ஆடும் அவனையும் அவர்களுக்கான பேக்கப் வீரர்களையும் தேர்ந்தெடுப்பதில் ஒவ்வொரு அணிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தன்னுடைய திட்டங்களையும் யுத்திகளையும் நிறைவு செய்த இந்த நேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோ எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இடம் பெற மாட்டார் என்ற தகவல் பேரிடியாக அமைந்துள்ளது.

காயத்தால் அவதியுறும் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஐபிஎல் தொடருக்கு பின்பு நடைபெறும் புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்கு தன்னை தயார்படுத்தி வருவதால் நிச்சயம் இவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என இங்கிலாந்து அணியின் தரப்பு தெரிவித்துள்ளது.

 

வருடம் வருடம் ஐபிஎல் பட்டத்தை வெற்றி பெறும் கனவு கண்டு வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவின் இழப்பு நிச்சயம் பேரிழப்பாக அமைந்துள்ளது, இருந்தாலும் பஞ்சாப் கிங்ஸ் அணி தன்னுடைய லட்சியத்தை இந்த வருடம் நிறைவு செய்வதற்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.