சரியான ட்விஸ்ட் கொடுத்த சென்னை… சீனியர் வீரர்களுக்கு குட் பை; சென்னை அணி விடுவித்த வீரர்களின் முழு விபரம் இதோ !!

சரியான ட்விஸ்ட் கொடுத்த சென்னை… சீனியர் வீரர்களுக்கு குட் பை; சென்னை அணி விடுவித்த வீரர்களின் முழு விபரம் இதோ

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து வருகின்றன.

 

அந்தவகையில், ஐபிஎல் தொடரின் முக்கிய அணிகளுள் முதன்மையான அணியான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்து கொண்ட மற்றும் விடுவித்த வீரர்கள் குறித்தான முழு விபரம் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியின் பெரிய ஆடையாளமாக திகழ்ந்த டூவைன் பிராவோவை விடுவித்துள்ளது. அதே போல் இந்திய அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பாவையும் விடுவித்துள்ளது. இது தவிர நியூசிலாந்து அணியின் ஆடம் மில்னே மற்றும் இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் ஆகியோரையும் சென்னை அணி விடுவித்துள்ளது.

அதே போல் தமிழகத்தை சேர்ந்த ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோரையும், ஆசிப், பகத் வர்மா போன்றோரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இருந்து விடுவித்துள்ளது.

இந்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக ரூ.5 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ரூ.5 கோடியுடன் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு ரூ.20.45 கோடி கையிருப்பில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்;

டூவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிரிஸ் ஜோர்டன், பகத் வர்மா, ஆசிப், நாரயன் ஜெகதீசன்.

தற்போதைய சென்னை அணி;

தோனி, டீவன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயூடு, சுப்ஹர்நசு சேனாபதி, மொய்ன் அலி, சிவம் துபே, ஹங்ரேக்கர், டூவைன் ப்ரேடோரியஸ், மிட்செல் சாட்னர், ரவீந்திர ஜடேஜா, துசார் தேஸ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மத்தீஷா பதிரானா, சிம்ரஜித் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலன்கி, மகேஷ் தீக்‌ஷன்னா.

கையிருப்பில் உள்ள தொகை – 20.45 கோடி.

Mohamed:

This website uses cookies.