சிஎஸ்கே ரசிகர்களே மனச இரும்பாக்கிகோங்க.. தீபக் சஹர், பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான அதிர்ச்சி செய்தி! – எத்தனை போட்டிகள் இருக்கமாட்டார்கள்?

தீபக் சகர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதால், அவர்கள் எத்தனை போட்டிகள் விளையாட மாட்டார்கள்?என்பது குறித்து தகவல் வெளியிட்டு இருக்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம். மொயின் அலி எப்போது அணிக்கு திரும்புகிறார் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி தற்போது பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி தீபக் சகர் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் இருப்பதால் மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதில் இருவர் மூவரும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இல்லை, தீபக் சஹர் போட்டியின் நடுவே வெளியேறினார்.

இவர்கள் இல்லாதபோது, ஜடேஜா மற்றும் சான்ட்னர் பவுலிங்கிலும், ரகானே அதிவேகமாக அரைசதம் அடித்து அசத்தியதால்,  பேட்டிங்கிலும் இவர்களின் பங்களிப்பு தேவைப்படாமல் போனது.

அடுத்தடுத்த போட்டிகளிலும் இதே நிலையில் சிஎஸ்கே அணி தொடரும் என்று எதிர்பார்ப்பது முறையாக இருக்காது. ஆகையால் தீபக் சகர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் எப்போது மீண்டும் அணிக்கு திரும்புகிறார்கள்? அவர்களின் காயத்தின் நிலை இப்போது எப்படி இருக்கிறது? என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்ஸ் ஸ்டோக்ஸ் இடது காலில் பிரச்சினை இருந்ததால் சில போட்டிகள் பந்துவீசமாட்டார் என கூறப்பட்டது. பின்னர் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசினார். இது ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன் பயிற்சியின்போது அவரது குதிகாலில் காயம் ஏற்பட்டதால்,  பிளேயிங் லெவலில் பென் ஸ்டோக்ஸ் எடுக்கப்படவில்லை. இப்போது “இந்த காயம் முழுமையாக கவனிக்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல குணமடைந்தும் வருகிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் மீது ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று இன்னும் சில போட்டிகள் வெளியில் அமர்த்தி ஓய்வு கொடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.” என்று சிஎஸ்கே தரப்பில் இருந்து தகவல் வந்திருக்கிறது.

இதனடிப்படையில், குறைந்தது ஒருவார காலம் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக போட்டிக்கு நடுவே காலில் காயம் ஏற்பட்டு பாதியிலேயே வெளியேறினார் தீபக் சஹர். உடனடியாக இவரை அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். நேற்றைய தினம் இந்த ஸ்கேன் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி,

“தீபக்சேகர் கண்டிப்பாக ஒருவார காலம் ஓய்வு எடுக்க வேண்டும். அவரது காயம் குணமடைவதற்கு ஓய்வு கிடைத்தால் போதுமானது. இப்போது அதில் எந்தவித ஆபத்தும் இல்லை” என்று சிஎஸ்கே தரப்பில் இருந்து தகவல்கள் வந்திருக்கிறது

பென் ஸ்டோக்ஸ் இல்லாதது வருத்தமளித்தாலும், ஏற்கனவே அவர் பவுலிங் செய்யமுடியாத நிலையில் தான் இருந்தார். ஆகையால் ஸ்டோக்ஸ் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு எவ்வித பின்னடைவும் இல்லை என்றவாறு பார்க்கப்படுகிறது. ஆனால், தீபக் சஹர் ஒருவார காலம் அணியில் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு பவர்-பிளே ஓவர்களில் மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொயின் அலி, சாதாரண வயிற்றுப் பிரச்சனை காரணமாகவே விளையாடவில்லை. கண்டிப்பாக அடுத்த லீக் போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் தகவல் உறுதியாகி உள்ளது.

Mohamed:

This website uses cookies.