ரிக்கி பாண்டிங் நீ பெரியமனுசன்னு காட்டீட்டயா.. ரிஷப் பண்ட் எங்கக்கூட கிரவுண்டுல இருப்பாருன்னு சொன்னதை செய்துகாட்டி.. கௌரவப்படுத்திய ரிக்கி பாண்டிங்!

இந்த வருட ஐபிஎல்-இல் கலந்துகொள்ள முடியாத ரிஷப் பண்ட்டை கௌரவப்படுத்தும் விதமாக டக்-அவுட்டில் அவரது ஜெர்சியை தொங்கவிட்டுள்ளார் ரிக்கி பாண்டிங்.

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு சாலையில் சென்று கொண்டிருந்த ரிஷப் பாண்ட் கார் அதிகாலையில் விபத்திற்கு உள்ளானது. இதனால் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரிஷப் பண்ட்-டிற்கு கை, கால்கள் உட்பட உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டிருந்தது. கால் பகுதியில் கட்டாயம் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், ஜனவரி மாதம் செய்து கொண்டார்.  அடுத்த 18 மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரிஷப் பண்ட், இந்த வருடம் இல்லாததால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் டேவிட் வார்னர் உள்ளிட்ட சில டெல்லி அணியினரும் அவரை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்தனர்.

இதில் ரிக்கி பாண்டிங் ஒரு படி மேலே சென்று உணர்வுபூர்வமாக பேசியதோடு, ரிஷப் பண்ட் இந்த வருடம் போட்டிகள் நடக்கையில் எங்களுடன் தான் டக்வுட்டில் இருப்பார் என்றார்ம் அவர் சொன்னதற்கு ஏற்றவாறு நடந்தும் காட்டியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் போது டெல்லி வீரர்கள் அமர்ந்திருக்கும் டக்கவுட்டில் ரிஷப் பண்ட் ஜெர்சியை ரிக்கி பாண்டிங் தொங்கவிட்டு கௌரவப்படுத்தியுள்ளார்.

முதல் போட்டி..

லக்னோ அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி வரும் டெல்லி அணி முதலில் பந்துவீசியது. பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு, துவக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 73 ரன்கள், நிக்கோலஸ் பூரான் 36 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது.

Mohamed:

This website uses cookies.