முக்கியமான கட்டத்தில் டெல்லி வீரர் கேச்சை தவறவிட்டதால், வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி கட்டினார் வெஸ்ட் இண்டீஸ் வீரர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 193 ரன்கள் அடித்தது.
2023 ஐபிஎல் சீசனின் மூன்றாவது போட்டியில் லக்னோ மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
லக்னோ மணிக்கு துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் களமிறங்கினர். துவக்கம் முதலே தடுமாறி வந்த கேஎல் ராகுல் 12 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 15 பந்துகளுக்கு 14 ரன்கள் மட்டுமே அடித்திருந்தபோது, இவரது கேட்சை டெல்லி வீரர் கலீல் அகமது தவறவிட்டார். இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய தவறாக மாறியது.
கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேயர்ஸ் சிக்ஸர் மழைகளாக பொழிந்தார். ஏழு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 38 பந்துகளுக்கு 73 ரன்கள் அடித்திருந்தபோது அக்சர் பட்டேலின் அபாரமான பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
தீபக் ஹூடா 17 ரன்கள், ஸ்டாயினிஷ் 12 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்ததாக உள்ளே வந்த மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் மூன்று சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 21 பந்துகளுக்கு 36 ரன்கள் விலாசி ஆட்டமிழந்தார். கடந்த சீசனில் தனது அதிரடி மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த ஆயுஸ் பாதோனி 20ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்தார்.
லக்னா சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்திருந்தது. சேத்தன் சக்காரியா மற்றும் கலீல் அகமது இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.