ஐபிஎல் 2023: வானவெடிக்கை பாக்க தயாராகுங்க… சிஎஸ்கே முதலில் பேட்டிங்… அணியில் என்னென்ன மாற்றங்கள்?? – விபரங்கள் உள்ளே!

முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கோலாகலமாக துவங்கியது. துவக்க நிகழ்வுகள் முடிந்த பிறகு முதல் போட்டி துவங்கியது.

துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த மைதானத்தில் ஷேர் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டாசை இழந்தது சற்று வருத்தத்தை கொடுத்திருக்கிறது மகேந்திர சிங் தோனி இதைக் குறிப்பிட்டு பேசினார் அவர் கூறியதாவது இந்த மைதானம் இரண்டாம் பாதியில் சேவ் செய்ய சிறப்பானதாக இருக்கும் நாங்களும் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என்று இருந்தோம் துரதிஷ்டவசமாக டாஸ் இல்லாதது வருத்தமழைத்தாலும் போட்டியின் இது ஒரு அங்கமாக பார்க்கிறேன்.” என்றார்.

இந்த வருடம் ஐபிஎல்-இல் முதல் முறையாக சில விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில், அணிகள் டாஸ் போடப்பட்ட பிறகு, அதற்கு ஏற்றவாறு பிளேயிங் லெவனை மாற்றிக் கொள்ளலாம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் கூடுதலாக ஒரு வீரரை வைத்துக் கொள்ளலாம். அவரை “இன்பாக்ட் வீரர்” முறைப்படி போட்டியின் நடுவே பயன்படுத்தலாம் என்ற விதிமுறையும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இது குறித்தும் பேசிய தோனி, “இம்பேக்ட் பிளேயர் விதிமுறை ஒரு வரப்பிரசாதம். போட்டிகள் நிறைந்த இந்த தொடரில் இப்படி ஒரு விதிமுறை வந்திருப்பது இன்னும் சுவாரசியத்தை கொடுக்கிறது.” என்றார்.

சிஎஸ்கே அணி:

ருத்துராஜ், கான்வெ, ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜடேஜா, சிவம் துபெ, தோனி, சான்ட்னர், தீபக் சஹர், ராஜ்வர்தன்.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

சகா, ஷுப்மன் கில், வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா, விஜய் ஷங்கர், தேவாட்டியா, ரஷீத் கான், ஷமி, ஜோஷுவா லிட்டில், யாஷ் தயால், அல்சாரி ஜோசப்.

 

Mohamed:

This website uses cookies.