இவரு மட்டும் ஐபிஎல் தொடரில் இருந்தால் கோடிகோடியா குவித்திருப்பார்; மறைந்த முன்னாள் ஜாம்பவான் குறித்து சுனில் கவாஸ்கர் உருக்கம்..
அவர் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றால் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2023 ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் சம்பந்தமான பேச்சுக்களும் முன்னாள் ஜாம்பவான்கள் குறித்த பேச்சுக்களும் கிரிக்கெட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்,இந்திய அணியின் மற்றுமொரு முன்னாள் ஜாம்பவானாக திகழ்ந்த சலீம் டுரானி மட்டும் தற்போதய ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அதில்,“சலீம் டுரைனி மிக மிக சிறந்த மற்றும் நல்ல மனிதர். நான் இந்திய அணிக்காக விளையாடும் போது அஜித் வடேகர்,ML ஜசிம்ஹா, எரபல்லி பிரசன்னா, திலிப் சர்தேசாய், மற்றும் சலீம் மாமா உள்ளிட்ட ஒருசிலாரோ அறிமுகமானது எனக்கு கிடைத்த வரமாகும். தற்போதைய ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மட்டும் சலீம் இருந்திருந்தால் நிச்சயம் அவர்தான் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
சலீம் டுரானி ஓர் அறிமுகம்..
1960 முதல் 1973 வரை இந்திய அணிக்காக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சலீம் டுரானி., இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளும் 170 முதல் தர போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தக்கூடிய திறமை படைத்த சலீம் டுரானி 1972-1973இல் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்றால் ஒட்டுமொத்த மைதானத்தையும் எரித்து விடுவோம் என்று கிரிக்கெட் ரசிகர்களால் பிசிசிஐக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாட வைக்கப்பட்டார். அந்த அளவிற்கு இவர் மீதான மோகம் இந்திய வட்டத்தில் அவர் விளையாடிய சமயத்தில் பரவியிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்திய கிரிக்கெட்டில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்த இந்த ஜாம்பவான் (2/04/2023) தன்னுடைய 88-வது வயதில் உலகை விட்டு பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.