தல தோனி எப்பவும் மாஸ்… என்னால அவர்கிட்ட எல்லாம் நெருங்க முடியாது; டூபிளசிஸ் ஓபன் டாக் !!

தல தோனி எப்பவும் மாஸ்… என்னால அவர்கிட்ட எல்லாம் நெருங்க முடியாது; டூபிளசிஸ் ஓபன் டாக்

இவர்களைப் போன்று ஒருபோதும் என்னால் மாற முடியாது என்று பெங்களூர் அணியின் கேப்டன் டூப்லசிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தாலும் தற்பொழுது ஐபிஎல் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெறும் SA-20 போன்ற லீத் தொடர்களில் அதிரடியாகவும், ஆக்டிவாகவும் செயல்பட்டு வரும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்லசிஸ்., தென்னாபிரிக்க அணிக்காக மூன்று விதமான தொடரிலும் அதிரடியாக செயல்பட்டு 11000+ குவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடர், சர்வதேச டி20 தொடர் என மொத்தம் 318 டி20 போட்டிகளில் பங்கேற்று 8,237 ரன்கள் குவித்து, டி20 தொடரின் அதிரடி பேட்ஸ்மனாக பார்க்கப்படும் டூப்லேசிஸ். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாகவும், SA-20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தென்னாபிரிக்க வெர்ஷனான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கிரிக்கெட் கரியரில் நடைபெற்ற சுவாரசியமான விஷயங்களை செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரியப்படுத்தி வரும் டுபிலேசிஸ் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய மகிழ்ச்சியான தருணத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், என்னுடைய ஆரம்ப கட்டத்திலேயே எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடு வாய்ப்பு கிடைத்தது ,அதில் இருக்கும் ஸ்டீபன் பிளமிங் உலகின் தலைசிறந்த தலைமை பண்பை பெற்றுள்ளவர். அவருடைய வித்தியாசமான தொலைநோக்கு பார்வை தான் அவரை அணியின் பயிற்சியாளராக மாற்றியுள்ளது, அவர் தன்னுடைய வேலையை உணர்வுபூர்வமாக செய்கிறார். அவரை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, முதல் முதலாக நான் சென்னை அணிக்காக விளையாடும் போது நான் பிளம்மிங் அருகில் உட்கார்ந்து தலைமைத்துவம் என்றால் என்ன கேப்டன்ஷிப் என்றால் என்ன என்பது குறித்து கேட்டு, அவரிடம் இருக்கும் வரை அதைப்பற்றி அறிந்து கொண்டேன், கேப்டன்ஷிப் என்றால் அதில் தோனிதான் முதன்மையானவர். அவருடைய திட்டமும் விளையாட்டை புரிந்து கொள்ளும் விதமும் அவர் சிறந்த கேப்டன் என்பதை உணர்த்துகிறது.

என்னை பொருத்தவரையில் எனக்கு என்ன நல்லது என்றால், நான் ஒருபோதும் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம்ஸ் ஸ்மித் போன்று கேப்டனாக முடியாது. அதேபோன்று நான் ஸ்டீபன் பிளமிங் போலவோ அல்லது மகேந்திர சிங் தோனி போலவும் என்னை ஒப்பிட்டுக் கொள்ள முடியாது, உண்மையில் நான் யாராக இருக்கிறேனோ அதுவாகவே இருக்க வேண்டும், நாம் நம்மைப் போல் செயல்படாமல் இருந்தால் மக்கள் அதனை அறிந்து கொள்வார்கள். நீங்கள் மோசமாக விளையாடும் பொழுதும் அல்லது நெருக்கடிக்கு உள்ளான பொழுதும் தானாகவே அது வெளியாகிவிடும்”என்று டூப்லசிஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.