அடேங்கப்பா… இது நம்ம லிஸ்டலையே இல்லையே; 16 வீரர்களை மொத்தமாக வெளியே அனுப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் !!

அடேங்கப்பா… இது நம்ம லிஸ்டலையே இல்லையே; 16 வீரர்களை மொத்தமாக வெளியே அனுப்பிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது அணியில் இருந்து 16 வீரர்களை விடுவித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து வருகின்றன.

 

அந்தவகையில், அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது அணியில் இருந்து 16 வீரர்களை விடுவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம் பில்லிங்ஸ், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், முகமது நபி என பலரை தனது அணியில் இருந்து விடுவித்துள்ளது. என்னதான் கொல்கத்தா அணி மொத்தமாக 16 வீரர்களை விடுவித்திருந்தாலும், கொல்கத்தா அணியின் கையிருப்பில் உள்ள தொகை வெறும் 7.05 கோடி தான்.

ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்சித் ரனா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய் மற்றும் ரின்கு சிங் ஆகிய வீரர்களை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மொத்தமாக விடுவித்துள்ளது.

கொல்கத்தா அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்;

ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்சித் ரனா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரின்கு சிங்.

மற்ற அணிகளில் இருந்து கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்ட வீரர்கள்;

ஷர்துல் தாகூர், ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், லோகி பெர்குசன்.

கொல்கத்தா அணி விடுவித்த வீரர்கள்;

பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சம்மிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் தோமர், அஜின்கியா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

கையிருப்பில் உள்ள தொகை – 7.05 கோடி

Mohamed:

This website uses cookies.